அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களில் விசேட வரவேற்பைப் பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நிறைவடைந்த நியூசிலாந்து விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினரை நியூசிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர், அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையின் நேரடி "கேள்வி நேர" விவாதங்களை நேரில் பார்வையிட்டார்.
இதன்போது, அவுஸ்திரேலிய பாராளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக் இனால் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இருதரப்புக்கும் இடையில் முக்கிய உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.
மேலும், அவுஸ்திரேலியா - இலங்கை பாராளுமன்ற நட்புச் சங்கத்துடனான கலந்துரையாடலிலும் அமைச்சர் பங்கேற்றார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துதல் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை சமூகத்தின் பங்களிப்பு குறித்தும் பாராட்டப்பட்டது.
குறிப்பாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கஸாண்ட்ரா பெர்னாண்டோவின் தலைமைத்துவத்தை அமைச்சர் விஜித ஹேரத் பெரிதும் பாராட்டினார். அத்துடன், மேலதிக கூட்டாண்மைகளை ஆராய்வதற்காக அவுஸ்திரேலியா - இலங்கை பாராளுமன்ற நட்புச் சங்கத்திற்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, நியூசிலாந்து விஜயத்தின் போது ஆக்லாந்து மற்றும் கிறைஸ்ட்சேர்ச் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களான பேராசிரியர் கிராண்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பேராசிரியர் பிராங்க் ப்ளூம்பீல்ட் ஆகியோரை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடல்களின் மூலம் இலங்கை மாணவர்களுக்கான உயர் கல்வி விசா மற்றும் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்வதற்கும், கூட்டு ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நிலநடுக்கத்தில் உயிரிழந்த 185 பேருக்காக, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் மலரஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM