அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை வழங்க வேண்டாம் - சுரேஷ் சலேயின் தாய் உருக்கம்!

08 Jun, 2026 | 04:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்காக எனது மகனை அர்ப்பணித்தேன்.ஆனால் அரசியல் நோக்கத்துக்காக பலிகொடுக்க போவதில்லை. இலங்கை தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை தாரைவார்க்க கூடாது அவ்வாறு வழங்கினால் என்னை போன்றே போராட நேரிடும் என அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் தாய் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காகவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை விடுவிக்க கோரி எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கோட்டை புகையிரத நிலையம் முன்பாக திங்கட்கிழமை (08) சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

எனது மகனான சுரேஷ் சலேவின் நிலையை கண்டு என் மனம் வேதனையடைகிறது. நாங்கள் இதுவரை காலமும் ஊடகங்கள் முன்பாக வந்ததில்லை. எமக்கு பாரியதொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவே இந்த இடத்துக்கு வந்தோம்.

எனது மகனுக்காக சத்தியாகிரக போராட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே நான் எனது மகனை அர்ப்பணித்தேன். அரசியல் பழிவாங்களுக்காக மகனை பலி கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவில்லை.

எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை தாரைவார்க்க கூடாது அவ்வாறு வழங்கினால் என்னை போன்றே போராட நேரிடும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34