'ரஷோமான் எஃபெக்ட்'டில் 'மூன்றாம் கண் ' படம் உருவாகி இருக்கிறது - இயக்குநர் சகோ. கணேசன்

08 Jun, 2026 | 03:35 PM
image

விதார்த் -கலையரசன்- சந்தோஷ் பிரதாப் - திரி குன் - ஆகிய நடிகர்கள் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மூன்றாம் கண்' திரைப்படம் - உலக சினிமாவில் அரிதாக கருதப்படும் 'ரஷோமான் எபெக்ட் ' எனப்படும் பார்வையாளர்களின் கோணத்தில் கதையை விவரிக்கும் வடிவத்தில் உருவாகி இருக்கிறது என படத்தின் இயக்குநர் சகோ. கணேசன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூன்றாம் கண்' திரைப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரி குன், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய், ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜீஷ் மற்றும் ஆர் எஸ் ராஜ பிரதாப் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரெண்டிங் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. சசிகுமார் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் சகோ கணேசன் பேசுகையில், '' மூன்றாம் கண் திரைப்படம் வித்தியாசமான கொமர்ஷியல் திரைப்படம். 'விருமாண்டி' திரைப்படத்தில் இடம்பெற்ற திரைக்கதையை போல் இந்த திரைப்படத்திலும் சர்வதேச அளவில் போற்றக்கூடிய 'ரஷோமான் எபெக்ட் ' என்ற சுவாரசியமான விடயத்தை  பயன்படுத்தியிருக்கிறோம்.‌ இதுவும் ஒரு பரிசோதனை முயற்சி தான். இந்த கதையை தயாரிப்பாளரிடம் விவரித்தவுடன்... புதுமுக இயக்குநர் என்றாலும் கதை மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உச்சகட்ட காட்சி வரை ரசிகர்களுக்கு அற்புதமான திரில்லர் ஜேனரிலான படங்களை பார்க்கும் அனுபவம் கிடைக்கும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:27:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54