நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற கோரி போராட்டம்!

08 Jun, 2026 | 03:19 PM
image

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம்  ஒன்று இன்று (08) திங்கட்கிழமை  பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது நானாட்டான் டிலாசால் கல்லூரியில்  ஊடகம் தொடர்பான கற்கை ஆசிரியர்  ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி  பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும்  மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து   முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர்  பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து   ஊடகம் தொடர்பான கற்றலில் பின்னோக்கி காணப்படுவதாகவும்  மாணவர்கள்   ஊடக கற்றலுக்கு செல்ல மறுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும்  பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை எனவும்,    நிர்வாகச் செயற்பாடுகளில்  தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வருவதாகவும்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதும்  இதுவரை எந்த விதமான  நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும்  அதனால் இந்த அமைதி வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக  கலந்து கொண்ட பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் குறித்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மகஜரை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு வாரங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து வலயக்கல்வி அலுவலகம் சார்பாக வருகை தந்த அதிகாரிகளிடமும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் கை யளித்ததோடு,தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காது விட்டால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த  போராட்டத்தில்   பெற்றோர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08