“Shakira Live in Kandy 2026”, “Pitbull Live in Sri Lanka 2026” ஆகிய விளம்பரங்கள் போலியானவை – எலிஃபன்ட் ஹவுஸ் அறிவிப்பு

08 Jun, 2026 | 03:19 PM
image

எலிஃபன்ட் ஹவுஸ் வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டு, “Shakira Live in Kandy 2026” மற்றும் “Pitbull Live in Sri Lanka 2026” ஆகிய நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்கள் இணைய வழியாக பரப்பப்பட்டு வருவதாக சிலோன் கோல்ஸ் ஸ்ரோர்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு அறியக் கிடைத்துள்ளது.

அத்தகைய எந்தவொரு நிகழ்வுடனும் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி அல்லது எலிஃபன்ட் ஹவுஸ் ஆகியவற்றுக்கு எவ்விதமான தொடர்புகளோ அல்லது ஈடுபாடோ அல்லது அனுசரணையோ கிடையாது என  எலிஃபன்ட் ஹவுஸ் தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்வுகளுக்கு எலிஃபன்ட் ஹவுஸ் வழங்குவதாக, ஆதரவளிப்பதாக, அல்லது அவற்றுடன் இணைந்துள்ளதாகக் குறிப்பிடும் எந்தவொரு விளம்பரமும் அனுமதியற்றவை என்பதுடன் உண்மைக்குப் புறம்பானவை.      

தனது அனுமதியின்றி வர்த்தக அடையாளம் பயன்படுத்தப்படுவதை மிகவும் பாரதூரமான ஒரு விடயமாக சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி எடுத்துக் கொள்கின்றது.

ஆதாரமற்ற விளம்பரங்களை பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள், ஊடகம், மற்றும் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் நாம் வலியுறுத்துவதுடன், உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் அடங்கலாக, சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி மற்றும் எலிஃபன்ட் ஹவுஸ் ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஊடகங்கள் மூலமாக வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை மாத்திரமே நம்புமாறு கேட்டுக்கொள்கின்றது.

எலிஃபன்ட் ஹவுஸ் உடன் தொடர்புபட்ட எந்தவொரு நிகழ்வு, அனுசரணை, கூட்டாண்மை, அல்லது விளம்பரம் ஆகியன மேற்குறிப்பிட்ட உத்தியோகபூர்வ ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே பொதுமக்களுக்கு அறியத்தரப்படுகின்றது.

எமது வர்த்தகநாமங்கள் மீதான நம்பிக்கையைக் கட்டிக்காப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், எலிஃபன்ட் ஹவுஸ் நாமம், இலச்சினை, அல்லது வர்த்தகநாம விளம்பரங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.

அதேசமயம், இந்த வகையிலான மோசடிகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான செயற்பாடுகளிலிருந்து எமது நுகர்வோரைப் பாதுகாப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49
news-image

2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 450க்கும் அதிக...

2026-07-06 13:23:11
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது...

2026-07-03 17:26:38
news-image

அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக...

2026-07-01 18:05:32
news-image

'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025'...

2026-07-01 16:49:54
news-image

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி...

2026-07-01 16:39:39
news-image

ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை...

2026-07-01 16:34:30
news-image

இளம் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்திற்கு...

2026-07-01 09:50:18
news-image

பணப் பாவனையற்ற டிஜிட்டல் இலங்கைக்கு வலுசேர்க்கும்...

2026-06-25 15:08:16
news-image

“Shakira Live in Kandy 2026”,...

2026-06-08 15:19:26