பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் புதியவர்கள் சம்பியனாகினர்

08 Jun, 2026 | 03:12 PM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் களிமண் தரை டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நிறைவுபெற்ற  பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிரல்படுத்தலில் 2ஆம் இடத்திலிருந்த ஜேர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்வும் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடுநிலையாளராக போட்டியிட்ட 19 வயதான இளம் வீராங்கனை மிரா அண்ட்றீவாவும் (ரஷ்யா) சம்பியன் பட்டங்களை சூடி வரலாறு படைத்தனர்.

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டி வரலாற்றில்  இந்த வருடம்   ஒற்றயைர் பிரிவுகளில் புதியவர்கள் இருவர் சம்பியனாகியமை விசேட அம்சமாகும்.

அது மட்டுமல்லாமல் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ், மிரா அண்ட்றீவா ஆகிய இருவரும் மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டி வரலாற்றில் சம்பியனானது இதுவே முதல் தடவையாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிரல்படுத்தலில் 10ஆம் இடத்திலிருந்த இத்தாலி வீரர் ஃப்ளாவியோ கோபொலியை இறுதிப் போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் எதிர்த்தாடினார்.

ஐந்து செட்கள் நீடித்த மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 3 - 2 என்ற செட்கள் (6 - 1, 4 - 6, 6 - 4, 6 - 7, 6 - 1) வித்தியாசத்தில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடினார்.

இதற்கு முன்னர் மகளிர் ஒற்றைய இறுதிப் போட்டியில் நிரல்படுத்தலில் 8ஆம் இடத்தில் இருந்த மிரா அண்ட்றீவா வெற்றிபெற்று சம்பியனானார்.

இறுதிப் போட்டியில் நிரல்படுத்தலில் இடம்பெறாத போலந்து வீராங்கனை மஜா ச்வாலின்ஸ்காவை எதிர்த்தாடிய மிரா அண்ட்றீனா 2 நேர் செட்களில் (6 - 3, 6 - 2) வெற்றிகொண்டு தனது முதலாவது மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54