அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (07) இரவு போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து தனித்தனியே 430 மில்லிகிராம் மற்றும் 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இருவரும் அக்கரப்பத்தனை மற்றும் டிக்கோயா பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அக்கரபத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM