செஸ் சம்பியன் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்! 

08 Jun, 2026 | 02:14 PM
image

நோர்வே செஸ் தொடரில் விளையாடி, சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய இளைஞரான பிரக்ஞானந்தா (வயது 20), தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று (8) சந்தித்து, வாழ்த்து பெற்றார். 

இதன்போது பிரக்ஞானந்தாவுடன் விஜய் செஸ் விளையாடிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 

கடந்த சனிக்கிழமை (6) நடைபெற்ற  நோர்வே செஸ் தொடரின் நிறைவு நாள் போட்டியில் பல நாட்டு வீரர்களை பின்தள்ளி, இறுதிச் சுற்றில் ஜெர்மனி செஸ் வீரரான வின்சென்ட் கீமரை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று, இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா சாதனை படைத்தார். 

அதனையடுத்து, வெற்றியோடு சென்னைக்கு இன்று திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரை சந்தித்தார். 

அவ்வேளை விஜய் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, அந்த இளம் வீரரோடு செஸ் விளையாடினார். 

இது தொடர்பாக பிரக்ஞானந்தா கூறுகையில், 

“தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் சார் என்னை அழைத்து பாராட்டியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விஜய் சார் நன்றாக செஸ் விளையாடினார். நான் வெற்றி பெற்றாலும் அவர் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று எனக்கு தெரியாது. அத்துடன் எனக்கு 50 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கினார்” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07