கிரா­மப்­பு­றங்­களைச் சேர்ந்த சிறு­மிகள், யுவ­தி­களை ஏமாற்­றியும் கடத்தி வந்தும் களி­யாட்ட விடு­தி­களில் நடன மங்­கை­யர்­க­ளா­கவும், பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்தும் திட்­ட­மிட்ட  நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வது குறித்து இர­க­சிய பொலிஸ் விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

15 வய­தான சிறு­மி­யொ­ருவர் இரவு நேர களி­யாட்ட விடு­தியில் நட­னத்தில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் வெலிக்­கடை பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட சம்­ப­வத்­தை­ய­டுத்து இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. இரவு நேர களி­யாட்ட விடு­தியில் ஏனைய பெண்­க­ளுடன் இந்த சிறுமி நட­னத்தில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­தலில் சிறுமி மீட்­கப்­பட்­டுள்ளார்.

தும்­ம­ல­சூ­ரிய பொலிஸ் பிரிவில் வசித்து வரும் பாட­சாலை சிறுமி ஒரு­வரே இவ்­வாறு மீட்­கப்பட்­டுள்ளார்.

இந்­நி­லையில், சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளாரா என்­பதை அறிய அவரை மருத்­துவப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தும்­ம­ல­சூ­ரிய பொலிஸார் தெரி­வித்­தனர்.

நன்கு பழக்­க­மான 18 வய­தான இளைஞன், சிறு­மியை திரு­மண வைபவம் ஒன்­றுக்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் அன்றில் இருந்து சிறுமி வீடு திரும்­ப­வில்லை என்றும் பெற்றோர் தும்­ம­ல­சூ­ரிய பொலிஸ் நிலை­யத்தில் செய்துள்ள முறைப்­பாட்­டுக்கு அமை­வாக முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே சிறுமி கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்ளார். இந்த நிலை­யி­லேயே வெலிக்­கடை களி­யாட்ட விடு­தியில் இருந்த சிறுமி வெலிக்­கடை பொலி­ஸாரின் உத­வி­யுடன் மீட்­கப்பட்­டுள்ளார்.

வெலிக்­கடை பொலிஸார் குறித்த இரவு நேர களி­யாட்ட விடு­தியை சுற்­றி­வ­ளைத்து சிறு­மியை மீட்ட பின்னர், அவ­ரிடம் வாக்­கு­மூ­லத்தை பெற்ற பின்னர், தும்­மல்­ல­சூ­ரிய பொலி­ஸா­ரிடம் கைய­ளித்­துள்­ளனர். 

இந்­த நி­லையில் சிறு­மியை அழைத்துச் சென்­ற­தாக கூறப்­படும் 18 வயது இளை­ஞனை கைது செய்ய பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். சிறு­மியை திரு­மண வைப­வத்­திற்கு அழைத்துச் சென்ற இளைஞர் கடந்த 16ஆம் திக­தியில் இருந்து 20ஆம் திகதி வரை இரவு நேர களி­யாட்ட விடு­தியில் தங்க வைத்­துள்­ள­தா­கவும், இதன் கார­ண­மாக தான் ஏனைய பெண்­க­ளுடன் இணைந்து நட­ன­மாட நேரிட்­ட­தா­கவும் சிறுமி, பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் கூறி­யுள்ளார்.

அத்­துடன் இரவு நேர களி­யாட்ட விடு­திக்கு வந்த நடுத்­தர வய­தான நபர், சிறு­மியை பாலியல் செயல்­க­ளுக்­காக பணி­யாளர் ஒரு­வ­ரிடம் விலைக்கு கேட்­ட­தா­கவும், பணி­யாளர் சிறு­மியை நடுத்­தர வய­தான நப­ருக்கு கொடுக்க முயற்­சித்த போது அங்­கி­ருந்த ஒரு நபர்  அதனை எதிர்த்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார் இரவு நேர களியாட்ட விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் 5 பெண்களையும், 10 ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.