சீனப் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியின் எதிர் விளைவாக கொழும்பு பங்­குச்­சந்தையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தியுள்­ளது. அந்த வகையில்நேற்று முன்தினம் கொழும்பு பங்­குச்­சந்தை 0.50 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்தது.

அன்றைய தின சந்தை நட­வ­டிக்கைகள் முடி வின் போது அனைத்து பங்கு விலைச்­சுட்­டி­யா­னது 6,322.96 ஆக காணப்­பட்­டது இதனை முன்­னைய தினத்­துடன் ஒப்­பி­டு­கையில் 31.96 அலகு வீழ்ச்­சி­யாகும்.

இந்த வீழ்ச்­சிக்கு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பீ.எல்.சி. இன் பங்­குகள் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திக­திக்கு பின்னர் பதிவு செய்த வீழ்ச்­சி­யே காரணமாகும்.நேற்று முன்­தினம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பீ.எல்.சி. இன் பங்­குகள் 153.70 ரூபா­வாக பதிவு செய்­யப்­பட்ட போதிலும் 150.10 ரூபா வரை அந் நிறு­வ­னத்தின் பங்­குகள் விற்­பனை செய்­யப்­பட்­டன.

அன்­றைய சந்தை புரள்­வா­னது 341.34 மில்­லியன் ரூபா­வாக பதி­வா­கி­யி­ருந்­தது.இதில் உள்­நாட்டு கொள்­வ­னவு 238 மில்­லயன் ரூபா­வா­கவும் உள்­நாட்டு விற்­பனை 241.79 மில்­லியன் ரூபா­வா­கவும் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.வழமைபோல் அன்­றைய தினம் கொழும்பு பங்கு கொடுக்கல் வாங்­க­லுக்கு வெளிநாட்­ட­வர்­களின் பங்­க­ளிப்பு மந்­த­மாக காணப்­பட்­ட­துடன் வெளிநாட்டு கொள்­வ­னவு 103.38 மில்­லியன் ரூபா­வாக காணப்­பட்டு வெளிநாட்டு விற்­பனை 99.55 மில்­லியன் ரூபா­வாக காணப்­பட்­டது.

வெளிநாட்டு கொள்­வ­னவில் ஏசியா எசெட் பினான்ஸ் நிறு­வ­னத்தின் 25 மில்­லியன் பங்­குகளை ரூ.1.50 விகிதம் வெளிநாட்­டா­வர்­க­ளினால் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டி­ருந்­தமை உள்­ள­டங்­கி­யி­ருந்­தது.

சீனாவில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக சீன பங்­குச்­சந்தை கடந்த சில கால­மாக பாரிய வீழ்ச்­சியை பதிவு செய்து வரு­கின்­றது.அந்த வகையில் ஷங்காய்பங்­குச்­சந்­தையின் பிர­தான சந்தை குறி­யீ­டான Shanghai Composite Index நேற்று முன்­தினம் 6.4% ஆல் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. இது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்­திற்கு பின்னர் பதிவு செய்­யப்­பட்ட குறைந்த மட்­டத்­தி­லான பெறு­ம­தி­யாகும்.

அத்­துடன் ஜப்பான், ஹொங்கொங்,தென்கொரியா, தாய்வான, சங்கப்பூர்,வியட்னாம்,பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய வலய நாடு­களின் பங்­குச்­சந்­தை­களின் அநேக­மா­­னவற்றின் செயற்­பா­டுகள் மந்­தக்­கதியில் வீழ்ச்சியடைந்திருதமை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதே போல் ஆசிய வலயத்தில் பாரிய நிறுவனங்கள் 50இனால் தயாரிக்கப்படும் MSCIASIAAPEX 50 சுட்டி அன்றைய தினம் 2.22% இல் விழ்ச்சியடைந்திருந்தது.