அட்டன் - பொகவந்தலாவை வீதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தது : பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

Published By: Digital Desk 1

08 Jun, 2026 | 01:51 PM
image

அட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (8) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்ததில் அந்த வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. 

எனினும் தற்போது ஒருவழிப் போக்குவரத்துக்காக அவ்வீதி சரிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது, சரிந்து வீழ்ந்த மண்மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொடரும் மழையுடனான வானிலையால் அட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறியாக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் விழிப்புடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும் நோர்வூட் நிர்வாகப் பொறியியலாளர் அலுவலக அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08