(நெவில் அன்தனி)
லண்டனில உள்ள புகழ்பெற்ற வொட்டர்லூ பாலம் முதல்முறையாக கிரிக்கெட் ஆடுகளமாக அமைக்கப்பட்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணம் 2026 மிக பிரம்மாண்டமான முறையில் அங்குராரப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இம் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்திற்கு முன்னதாக, லண்டனில் புகழ்பெற்ற அடையாளங்கள் அமைந்துளள பகுதியில் 12 அணிகளினதும் தலைவிகள் பங்குபற்றிய பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகவுதற்கு முன்னதாக 12 அணித் தலைவிகளும் பொதுவெளியில் ஒன்றாகக்கூடிய முதலாவது நிகழ்வு இதுவாகும்.
பிக் பென் (Big Ben), சென். போல்ஸ் பேராலயம் (St. Paul's Cathedral), லண்டன் ஐ (London Eye) உள்ளிட்ட லண்டனின் உலகப் புகழ்பெற்ற அடையாளங்களுக்கு முன்னால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அணித் தலைவிகள் தின கொண்டாட்டம் தொடர்பாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது,
'மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரானது, அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக கிரிக்கெட் விளையாட்டை மாற்றுவதற்கான சரவ்தேச கிரிக்கெட் பேரவையின் முயற்சியின் வெளிப்பாடாகும். இது மகளிர் கிரிக்கெட்டுக்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகவும் விறுவிறுப்பான மற்றும் லட்சியம் மிக்க ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணமாக இது அமையும் என நாங்கள் நம்புகிறோம். அதைத் தொடக்கிவைப்பதற்கு இதுவே மிக பொருத்தமான வழி' என்றார்.
இலங்கை அணித் தலைவி சமரி கருத்து
இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது இளம் இலங்கை அணி தாக்கத்தை ஏற்படுத்தும் என அணி தலைவிகள் தினத்தில் இலங்கை அணி தலைவி சமரி அத்தபத்து நம்பிக்கை வெளியிட்டார்.
பிரபல அணிகளுடன ஒப்பிடுகையில் தனது அணி அனுபவம் குறைந்ததாக இருக்கின்றபோதிலும், அணியில் இடம்பெறும் திறமைசாலிகள் பலம்வாய்ந்த அணிகளுக்கு சவால் விடுக்கக்கூடியவர்கள் என சமரி அத்தபத்து தெரிவித்தார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM