பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் : உயிரிழப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு ; 129 பேர் காயம்!

08 Jun, 2026 | 01:16 PM
image

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (8) அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்க அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாகவும் 129 பேர் வரை இதில் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் முக்கிய தீவான மிண்டானாவோவின் ஆறு கரையோர பகுதிகளில் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளது.

இதனை பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்த அனர்த்தத்தினால் பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சேதமடைந்த கட்டடங்களின் பட்டியலை தற்போது வெளியிட முடியாத நிலை காணப்படுவதாகவும் பாதுகாப்புப் படை அதிகாரி ரொபர்ட் டகோன் தெரிவித்துள்ளார். 

தேசிய அனர்த்த முகவர் நிலையம் அளித்த தகவலின்படி, இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் 12 பேர் மிண்டானாவோ தீவின் சொக்ஸர்கான் பிராந்தியத்திலும் 3 பேர் டேவாவ் ஆக்ஸிடெண்டல் மாகாணத்திலும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பின்னதிர்வுகளின் (aftershocks) அச்சுறுத்தல் காரணமாக, சேதமடைந்த வீடுகள் அல்லது பிற உள்கட்டமைப்புகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு சிவில் பாதுகாப்பு அலுவலகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07