ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானச் சேவைகளும் மறு அறிவித்தல் வரை அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை அடுத்து, ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை வான்வெளி கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளதுடன், விமான நிலையத்திற்கான அனைத்து சேவைகளும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர், பாதுகாப்பு காரணங்களால் ஈரானின் மேற்கு வான்வெளியும் மூடப்பட்டிருந்தது. பல வாரங்களாக மூடப்பட்டிருந்த இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லெபனானின் தலைநகரான பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் முக்கிய இராணுவ இலக்குகளை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் தங்களது வான்வெளிகளை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பயணிகளும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM