"துபாய் நிபுண" என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது எனக் கருதப்படும் கேரள கஞ்சா போதைப்பொருள் ஒரு தொகை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
களுத்துறை தெற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாத் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த இடத்தில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அளுத்கம கலப்பு பகுதியில் புதைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாரிய கேரள கஞ்சாத் தொகையையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது, 102 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 227 கிலோகிராம் 620 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM