அங்குருவாதொட, படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் சடலங்கள் களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும் ஏழு சடலங்கள் ஹொரனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இதுவரை ஏழு பேரின் உடற்கூறாய்வு பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.
உயிரிழந்த முதியவர்களில் இருவரது சடலங்களைத் தவிர ஏனைய அனைவரும் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்களால் அடையாளம் காணப்படாத அல்லது உரிமை கோரப்படாத சடலங்கள் அனைத்தும், 14 நாட்களுக்குப் பின்னர் அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 03 ஆம் திகதி ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு, மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணைகளில், குறித்த முதியோர் இல்லம் முறையான உத்தியோகபூர்வ பதிவு எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM