(நமது நிருபர்)
களுத்துறை, வெட்டுமகட பள்ளிவாசல் வீதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகநபர் ஒருவர் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சந்தேகநபருக்கு எதிராக பல நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுத்துறை வலய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்றிருந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய, வெலிபன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலகெதர பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (7) குறித்த சந்தேகநபர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 36 வயதான அம்பாந்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், அவருக்கு எதிராக மதுகம, களுத்துறை, திஸ்ஸமஹாராம, வலஸ்முல்ல மற்றும் மொரவக்க ஆகிய நீதிவான் நீதிமன்றங்களின் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி காலை, களுத்துறை தெற்கில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது காரில் வந்த துப்பாக்கிதாரிகள் சூடு நடத்தித் தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM