நியூயோர்க் பென் ரயில் நிலையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: 5 பேர் காயம், சந்தேகநபர் கைது!

Published By: Digital Desk 1

08 Jun, 2026 | 08:17 AM
image

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பென் (Penn Station) ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளதாக நியூயோர்க் தீயணைப்புத் துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 07 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை அம்ட்ராக் பொலிஸார் தீவிர தேடுதலின் பின்னர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானவர் என்றும், இந்த தாக்குதல் தனிப்பட்ட தகராறு இன்றி தற்செயலாக நடத்தப்பட்ட ஒரு வன்முறைச் செயல் என்றும் அந்த நாட்;டு பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானி ஆகியோர் மேடிசன் ஸ்குவயர் கார்டனில் நடைபெறவுள்ள NBA கூடைப்பந்து இறுதிப் போட்டியைக் காண வருகை தரவுள்ளனர்.

இதனையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதியின் வருகை மற்றும் இச்சம்பவத்தை அடுத்து, மேடிசன் ஸ்குவயர் கார்டன் அரங்கிற்கு வெளியே நடத்தப்படவிருந்த ரசிகர்களின் நேரடிப் பார்வைக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பைகள் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07