இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா  என இந்திய அணித் தலைவர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 முறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்கின்றார். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாகும். விலை மதிப்புமிக்க வீரராக இருக்கிறார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையிலேயே இந்திய அணித் தலைவர் கோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரில் இடம்பெறவுள்ளது.