ஐ.சி.சி. நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 9ஆவது 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நேற்று ஆரம்பமானது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடரில் இலங்கை அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இலங்கையோடு அதே பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து பிஜி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இங்கிலாந்தின் லோரன்ஸ் 174 ஓட்டங்களை விளாசினார். அத்தோடு பர்ணாம் 148 ஓட்டங்களை விளாசினார். 372 என்ற கடினமான வெற்றி இலக்கைத் துரத்திய பிஜி அணி 27.3 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 299 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதேதொடரின் மற்றொரு போட்டியில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது பங்களாதேஷ். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நஸ்முல் ஹொசேன் 73 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டமாகப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 48.4 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இதில் தென்னாபிரிக்காவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஸ்மித் 100 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்பஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் இலங்கை அணி கனடாவை எதிர்த்தாடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM