மட்டக்களப்பு, கல்லடி வேலூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை 10.00 மணியளவில் குறித்த வீட்டின் பகுதியிலிருந்து திடீரென கரும்புகை எழும்புவதை அவதானித்த அண்டை வீட்டின் உரிமையாளரும், அப்பகுதிப் பொதுமக்களும் உடனடியாகச் செயற்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தண்ணீரை அடித்து, தீ மேலும் பரவாமல் தடுத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை, தீ விபத்து குறித்து அயலவர்களால் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கு அவசரத் தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
பொதுமக்களின் துரிதமான மற்றும் சாதுரியமான தலையீடு காரணமாக, தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்னரேயே தீ ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதால், பெரும் சொத்துச் சேதங்களோ அல்லது உயிர் ஆபத்துகளோ ஏதுமின்றி பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM