உளவுத்துறைத்துறையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே 38 வருடங்களாக நாட்டிற்காக அர்ப்பணித்துப் பணியாற்றியுள்ளார். தற்போது அவருக்கு மக்கள் தங்களது நன்றியைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவரது மனைவி பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை காலையில் அவரைப் பார்வையிடுவதற்காக சுரேஷ் அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். அதன்பின்னர் அவரது மனைவி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எனது கணவர் ஒரு நிரபராதி என்பதை அனைவரும் அறிவர். அதிகாரிகள் அவரைப் பலிக்கடாவாக்கியுள்ளனர். அவர் இன்னமும் ஒரு சந்தேக நபராக மட்டுமே இருக்கின்றார். சிஐடிக்குள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார் என்பதை சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை கூட உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது மனதை மாற்றி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடச் செய்ய நாங்கள் பலமுறை பேசிப் பார்த்தோம். ஆனால் அவர் அதற்குச் சம்மதிக்கவே இல்லை. தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து போராடி வருகிறார். விசாரணைகளை நடத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அவரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்.
நாட்டுக்காகவே அவர் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததால், ஒருமுறை கூட பிள்ளைகளின் பாடசாலைக்குச் செல்லக்கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு மனிதனை இந்த அளவுக்கு கேவலமான முறையில் நடத்துவது மிகவும் அநீதியானது. இதற்கு யார் பொறுப்பு என்பது எங்களுக்குத் தெரியும்.
அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டார். ஏனென்றால், தான் எப்படியும் நாட்டிற்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த ஒரு மனிதன் என்றே அவர் கூறுகிறார். அவர் எப்போதும் முதுகெலும்புடன் வாழ்ந்த ஒரு மனிதர். அவரைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
தற்போது சுரேஷ் சலே இருக்கும் உள மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர், உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குப் பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தது போல, இப்போது அவருக்காக நீங்கள் குரல் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தயவுசெய்து அவருக்காக முன்வாருங்கள் என்று பொதுமக்களிடத்தில் கோருகின்றேன் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM