கண்டியில் புதிய அரசியல் கூட்டணி கூட்டம்: எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று நாட்டை வழிநடத்த தீர்மானம்!

07 Jun, 2026 | 01:06 PM
image

எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவது மற்றும் நாட்டைச் சரியான பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வது ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலொன்று கண்டியில் அமைந்துள்ள டெவன் விடுதியில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வேலுகுமார், கண்டியின் முன்னாள் முதல்வர் கேசர சேனநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மேலாளர் சட்டத்தரணி சுஜித் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி சுனில் அமரதுங்க, சாந்தினி கொங்கஹகே, ஜே.எம். லஃபீர் மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் ஒன்றிணைந்துள்ள ஐக்கிய எதிர்க்கட்சி கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, புதிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு முன்னணி, சமகி ஜன சந்தானய (ஐக்கிய மக்கள் கூட்டணி), இலங்கை மக்கள் கட்சி மற்றும் சர்வஜன பலய ஆகியவற்றின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தமது அரசியல் நிலைப்பாடுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவிக்கையில்:

"எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் இந்த விரிவான கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பதிவு செய்வது உறுதி. நாட்டைச் சரியான பொருளாதார மற்றும் அரசியல் பாதையில் வழிநடத்திச் செல்வதே இக்கூட்டமைப்பின் பிரதான நோக்கமாகும் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34
news-image

“முழு நாடுமே ஒன்றாக” நடவடிக்கை :...

2026-07-17 14:10:57
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை ;...

2026-07-17 13:04:19