ஜீவந்த பீரிஸின் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை - சரத் வீரசேகர தெரிவிப்பு

07 Jun, 2026 | 12:21 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

தமிழ் மக்கள் உட்பட பல தரப்பினரையும் பிரபாகரன் கொடூரமாகக் கொலை செய்தார் என் பதை நாம் மறக்கக்கூடாது. ஜீவந்த பீரிஸ் முன்வைக்கும் கருத்துக்களை நாங்கள் எவ்விதத்திலும் பொருட்படுத்தப் போவதில்லையென பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலன் கருதி களனி விகாரையில் பொதுஜன பெரமுன கட்சியின் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் நேற்று சனிக்கிழமை (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி க்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் எனப் பல தரப்பினரையும் பிரபாகரன் கொடூரமாகக் கொலை செய்தார். சிங்கள, பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. கோணகல கிராமத்தில் அப்பாவித் தாய்மார்களின் கருவிலிருந்த குழந்தைகளை வெளியே எடுத்து, மீன் வெட்டுவது போலக் கொடூரமாக வெட்டிக் கொன்ற போதும், கொழும்பில் வேல் திருவிழா எவ்வித இடையூறுகளுமின்றி அமைதியாக இடம்பெற்றது. இதுவே சிங்கள பௌத்தர்களின் பொறுமையாகும். ஆனால், இந்த பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ஜீவந்த பீரிஸ் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜீவந்த பீரிஸ் முன்வைக்கும் கருத்துக்களை நாங்கள் எவ்விதத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை. உலகப் புகழ்பெற்ற யுத்தக் குற்றவியல் நிபுணர்களான  டெஸ்மண்ட் டி சில்வா, ஜெப்ரி நைஸ், பேராசிரியர் மைக்கல் கிரேன், பேராசிரியர் மைக்கல் நியூட்டன், ஜெனரல் ஜோன்ஸ் மற்றும் லோனி டிக்சன் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழுவின் அறிக்கைகளின்படி, இலங்கையில் எவ்வித இனப்படுகொலையும் நடக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

சுமார் 295,000 பொதுமக்களைக் காப்பாற்றி, உலகிலேயே அதிகப்படியான பிணைக் கைதிகளை மீட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரே இராணுவம் எமது இராணுவமாகும். இவை அனைத்தும் தன்னார்வ நிறுவனங்களின் பணத்துக்காக மக்களை ஏமாற்றக் கூறப்படும் கதைகளே தவிர, உண்மையானவை அல்ல என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34