H-1B விசா முறையை முற்றிலுமாக மாற்றியமைக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம்

Published By: Digital Desk 2

07 Jun, 2026 | 12:04 PM
image

அமெரிக்காவின் புகழ்பெற்ற H-1B விசா திட்டத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் வகையிலும், அதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக இரத்து செய்யும் வகையிலும் அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெக்சாஸின் 21ஆவது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிரப் போக்குடைய குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிப் ராய் , கடந்த வியாழக்கிழமை (04) அமெரிக்க பணியாளர்கள் வேலைவாய்ப்புச் சட்டம்" என்ற வரைவுச் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணிபுரிய அனுமதிக்கும் திட்டத்தை முழுமையாக இரத்து செய்யவும் இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது.

இந்த விசா சீர்திருத்தம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிப் ராய்,

கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில், H-1B விசா முறையானது பெருநிறுவனங்களால் பெருமளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. திறமையான அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களைப் புறக்கணித்துவிட்டு, மலிவான வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த இந்த விசா வழிவகுத்துள்ளது. தற்போது இந்த விபரீதமான குலுக்கல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தகுதியின்  அடிப்படையில் அதிக ஊதியம் வழங்கும் புதிய முறையைக் கொண்டுவர வேண்டிய நேரம் இது." எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவிற்கு முக்கிய அமெரிக்க அமைப்புகள் தங்களது முழு ஆதரவை வழங்கியுள்ளன. மேலும் தற்போதுள்ள H-1B விசா விதிமுறைகளை தலைகீழாக மாற்றும் வகையில் இந்த மசோதாவில் பல கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுவரை H-1B விசாவில் அமெரிக்கா செல்வோர் அங்கு பணிபுரிந்துகொண்டே நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சட்டப்பூர்வ அனுமதி இருந்தது. ஆனால், புதிய சட்டமூலம் படி விண்ணப்பதாரர்கள் தங்களுக்குச் சொந்த நாட்டில் நிரந்தர முகவரி இருப்பதையும், அதைத் துறக்கும் எண்ணம் இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

தற்போதைய விதிகளின்படி H-1B விசா மூலம் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் அமெரிக்காவில் இருக்க முடியும். புதிய சட்டம் இதனை 2 ஆண்டுகளாகக் குறைக்கப் பரிந்துரைக்கிறது.

கிரீன் கார்ட் அனுமதிக்காக காத்திருக்கும் காலப்பகுதியில் H-1B விசாவைத் தொடர்ந்து நீட்டித்துக் கொள்ளும் தற்போதைய சலுகையை இந்த சட்டமூலம் இரத்து செய்கிறது.

தற்போதைய கணினி அடிப்படையிலான குலுக்கல் முறைக்கு மாற்றாக, அதிக சம்பளம் சலுகையாக வழங்கும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான தற்போதைய நிர்வாகம், சட்டப்பூர்வ குடியேற்றத் திட்டங்களைக் கடுமையாக்கி வரும் பின்னணியில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டிரம்ப் நிர்வாகம் புதிய H-1B விசா மனுக்களுக்கு 1,00,000 டொலர் (சுமார் 1 இலட்சம் டொலர்) கட்டணத்தை விதித்துள்ளதுடன், நேர்காணல் இரத்து உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

இதன் காரணமாக இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் இந்த அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செயலாளர் முல்லின் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை இந்திய அரசாங்கமும் அமெரிக்காவிடம் உத்தியோகபூர்வமாகக் கொண்டு சென்றுள்ளது.

இந்த சட்டமூலத்தைத் தாக்கல் செய்துள்ள சிப் ராய், தற்போது பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் பதவிக்கான குடியரசுக் கட்சியின் முதற்கட்டத் தேர்தலில் போட்டியிட்டு சக வேட்பாளரான மேய்ஸ் மிடில்டனிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், அவர் கொண்டு வந்துள்ள இந்த சட்டமூலம் நிறைவேறினால் அமெரிக்காவில் பணிபுரியும் மற்றும் படிக்க விரும்பும்  இலட்சக்கணக்கான வெளிநாட்டினருக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07