39 நாடுகளுக்கான டொனால்ட் ட்ரம்பின் 'குடிவரவுத் தடை' சட்டவிரோதமானது - அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு

Published By: Digital Desk 3

07 Jun, 2026 | 10:55 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் அகதி அந்தஸ்து, வேலை அனுமதிப்பத்திரம் மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான முடிவுகளைப் பெறுவதைத் தடுக்கும் வகையிலான தொடர் கொள்கைகள் "சட்டவிரோதமானவை" என அமெரிக்க பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரோட் தீவின் பிராவிடன்ஸ் பகுதியிலுள்ள முதன்மை அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜோன் மெக்கானெல் இந்த  தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் திணைக்களம் தன்னிச்சையாக அமுல்படுத்திய இந்த விதிகள், ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களை ஒரு சட்டபூர்வமற்ற அந்தஸ்தற்ற நிலையில் தவிக்கவிட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட இந்த நீதிபதி, தனது தீர்ப்பில் முக்கிய புள்ளிகளைப் பதிவு செய்துள்ளார்.

அதாவது, பாராளுமன்றத்தின் சட்டபூர்வமான அங்கீகாரம் இன்றி, வெறும் "குடிவரவு எதிர்ப்பு உணர்வுகளின்" அடிப்படையிலேயே ட்ரம்ப் நிர்வாகம் இந்தத் தடைகளைக் கொண்டுவந்துள்ளது.

விண்ணப்பங்கள் தேங்கிக் கிடப்பதற்குக் குடிவரவாளர்கள் செய்த தவறு காரணமல்ல; மாறாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் திணைக்களம் பாராளுமன்றத்தின் குடிவரவுச் சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடிவரவாளர் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது குடிவரவுக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.

அமெரிக்கக் குடிவரவு அமைப்பைப் பாதுகாப்பதற்காக "அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் வரும் குடிவரவுகளை நிரந்தரமாக நிறுத்துவதாக" ட்ரம்ப் ஊடகங்களில் சவால் விடுத்தார்.

இதன் விளைவாக ஆப்கானிஸ்தான், ஈரான், ஹெய்ட்டி, சோமாலியா, வெனிசுவெலா மற்றும் சிரியா உள்ளிட்ட 39 நாடுகளுக்கு முழுமையான அல்லது பகுதியளவிலான பயணத் தடைகள் விதிக்கப்பட்டன. பாதுகாப்பு மற்றும் கடுமையான பின்னணிப் பரிசோதனைகளைக் காரணம் காட்டியே இத்தடைகள் நியாயப்படுத்தப்பட்டன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த பாரபட்சமான கொள்கைகளுக்கு எதிராகப் பல குடியேற்றவாசிகள் நலன்புரி அமைப்புகளும் தொழிலாளர் சங்கங்களும் இணைந்து கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.

இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய மனித உரிமை சட்டக் குழுவின் தலைவர் ஸ்கை பெர்ரிமேன்,  பெடரல் அரசாங்கமானது சட்டபூர்வமான குடிவரவுப் பாதைகளை தன்னிச்சையாக மூடவோ அல்லது மக்கள் வாழும் இடத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டவோ முடியாது என்ற அடிப்படை விதியை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். 

எனினும், இத்தீர்ப்பு குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வக் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07
news-image

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4...

2026-07-18 15:17:31
news-image

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி;...

2026-07-18 10:24:03
news-image

உகாண்டாவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ்...

2026-07-18 09:26:16