சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் 15 இல் வருகை

Published By: Digital Desk 2

07 Jun, 2026 | 10:32 AM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

உறுப்புநாடுகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதைத் தடுத்தல், வழிகாட்டல்களை வெளியிடல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பவற்றை பிரதான நோக்கங்களாகக்கொண்டு 2007 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவில் 25 சுயாதீன நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.

அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் மேற்படி உபகுழுவின் பிரதிநிதிகள், இம்மாதம் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்.

இக்காலப்பகுதியில் விசேடமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ள ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள், நாடளாவிய ரீதியில் பல்வேறு வகைப்படுத்தல்களின்கீழ் இடம்பெறும் சித்திரவதைகள், அவற்றைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், இச்செயன்முறையில் பொலிஸார், சிவில் சமூகஅமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய பங்காளிகளின் வகிபாகம் என்பன தொடர்பில் பரந்துபட்டகலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அதேவேளை சித்திரவதைகள் இடம்பெறக்கூடிய சாத்தியப்பாடு உள்ள இடங்களுக்கும் அவர்கள் களவிஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இவ்விஜயத்தின்போது சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான பிரத்யேக சந்திப்பொன்றுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன்...

2026-07-20 15:32:21
news-image

கல்முனை பொதுச் சந்தை மேம்பாடு குறித்து...

2026-07-20 15:14:50
news-image

வேலணை நூடுல்ஸ் உற்பத்தி நிலையத்தை நேரில்...

2026-07-20 14:52:21
news-image

வடக்கு சுற்றுலாத்தலங்களின் பொதுச் சுகாதார வசதிகளை...

2026-07-20 14:27:01
news-image

ஹபராதுவ பகுதியில் பெருமளவு போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்...

2026-07-20 14:07:32
news-image

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில்...

2026-07-20 14:00:34
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின்...

2026-07-20 13:54:14
news-image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அகற்றப்படும் சட்டவிரோத...

2026-07-20 13:32:16
news-image

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை...

2026-07-20 13:12:15
news-image

குரஞ்சாந்தீவு உப்பளத்தை மீண்டும் இயக்க துரித...

2026-07-20 13:08:05
news-image

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத்...

2026-07-20 13:02:47
news-image

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள்,...

2026-07-20 12:50:20