குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, ஈரானியச் சொத்துக்களை வளைத்து, அவற்றைக் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள போதிலும், இந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட நேரடி இராணுவ மோதல்களால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றாக முடங்கியுள்ளன.
ஈரானின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா வியூகம் வகுத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள இராஜதந்திரப் பின்னணியை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஈரான் இதுவரை வளைகுடா நாடுகளுக்கு ஏற்படுத்திய சேதங்களை மதிப்பிடுமாறு அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்காலச் சேதங்களை ஈடுசெய்யவும் ஈரானிய சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவினால் முடக்கப்பட்டுள்ள தங்களின் 24 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தால் மட்டுமே அமைதி ஒப்பந்தம் சாத்தியம் என ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா இந்த அதிரடிப் பதில் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் சனிக்கிழமை அதிகாலை கொடூர மோதல்கள் வெடித்துள்ளன.
ஈரானிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய அமெரிக்கப் படைகள், ஹோர்முஸ் நீரிணையிலுள்ள கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் அமைந்திருந்த ஈரானிய கடலோர ரேடார் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதற்குப் பழிவாங்கும் வகையில், அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரானின் புரட்சிகர இராணுவத்தினர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பொழிந்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகள் மீது பாய்ந்து வந்த 7 ஏவுகணைகளைத் தடுத்ததாகக் குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது. இதில் பாரிய பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பஹ்ரைனில் அபாயச் சங்குகள் ஒலிக்கப்பட்டு மக்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலும் உலக சந்தையிலும் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ள இந்த மூன்று மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உள்நாட்டில் கடும் அரசியல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ஜனாதிபதி ட்ரெம்ப், ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், அவர்களிடம் இன்னும் 21% முதல் 22% வரையான ஏவுகணைகள் எஞ்சியுள்ளன என்றும், அதுவும் ஒரு பாரிய அச்சுறுத்தல் தான் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த வெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு முழுவதும் விநியோகச் சங்கிலிகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே வொஷிங்டனுடன் அமைதி உடன்பாடு எட்டப்படும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்விசனிக்கிழமை அவசரமாகத் தெஹ்ரான் நகரைச் சென்றடைந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் விசேட கடிதத்தை ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோரிடம் ஒப்படைத்து, போரை நிறுத்த அவர் தீவிர இராஜதந்திர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM