அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்திலுள்ள டோலிடோ நகரில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற கோடைகாலத் திருவிழா ஒன்றிற்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து தப்பியோடிய துப்பாக்கிதாரிகளை தீவிரமாகத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டோலிடோ நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் நடைபெற்ற "ஓல்ட் வெஸ்ட் எண்ட் திருவிழா" நிறைவடையும் தருவாயில், அந்நாட்டு நேரப்படி மாலை 5.37 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காயமடைந்த பலரை மீட்டு அவசரச் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 12 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேர் தற்போது சீரான உடல் நிலைமையுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். எனினும், துப்பாக்கிக் குண்டுகளால் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது மக்கள் மரண பயத்தில் அலறியடித்துக் கொண்டும், தப்பியோட முயலும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மேலும், சிலர் காயமடைந்த நிலையில் புல்வெளிகளில் சரிந்து கிடக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
நேரடி இசை நிகழ்ச்சிகள், உணவுச் சந்தைகள் மற்றும் பாரம்பரிய இல்லச் சுற்றுப்பயணங்கள் எனப் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றுகூடும் ஒரு பிரம்மாண்டமான இரண்டு நாள் நிகழ்வாக இந்த 'ஓல்ட் வெஸ்ட் எண்ட்' திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கருதப்படும் டெலவெயர் அவென்யூ மற்றும் ராபின்வுட் அவென்யூ சந்திப்பானது, திருவிழாவின் பிரதான இசை மற்றும் உணவுப் பகுதியாகக் காணப்பட்டதால் அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், குடும்பங்கள் அச்சமின்றி கழிக்க வேண்டிய கோடைகால விழாக்களை இவ்வாறான குற்றவாளிகள் பாழாக்குவதைச் சகித்துக் கொள்ள முடியாது எனவும், குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் ஒஹாயோ மாநில ஆளுநர் மைக் டிவைன் உறுதியளித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM