நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் 

Published By: Digital Desk 3

07 Jun, 2026 | 09:14 AM
image

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்...

2026-07-13 17:39:16
news-image

தித்வா பாதிப்பு : வீடுகளை இழந்தவர்களுக்கான...

2026-07-13 17:19:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையின் மேல் போராடிய...

2026-07-13 17:03:24
news-image

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான, வசதிகள்...

2026-07-13 17:17:28
news-image

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் பொதுவான...

2026-07-13 16:54:47
news-image

ஆற்றில் நீராடச் சென்ற மாணவனை காணவில்லை

2026-07-13 16:49:33
news-image

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு: இன்று முதல்...

2026-07-13 16:43:03
news-image

முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா வருமானம்...

2026-07-13 16:29:44
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-13 16:42:47
news-image

தேசிய பதப்படுத்தப்பட்ட தேயிலை இலக்கை அடைவதற்காக...

2026-07-13 16:36:38
news-image

“தித்வா” பாதிப்பு : புதிய தெனியாய...

2026-07-13 16:02:52
news-image

மூதூர் மஹாவலி கங்கையில் மூழ்கிய பொலிஸ்...

2026-07-13 15:17:25