(நெவில் அன்தனி)
மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் 23 வருடங்களின் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
இப் போட்டி கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மார்வன் அத்தபத்துவின் தலைமையில் இலங்கை அணி 2003ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளை அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்டிருந்தது.
அதன் பின்னர் மஹேல ஜயவர்தன தலைமையில் 2008இல் 0 - 2 என்ற ஆட்டக் கணக்கிலும் திமுத் கருணாரட்ன தலைமையில் 2021இல் 0 - 3 என்ற ஆட்டக் கணக்கிலும் மேற்கிந்தியத் தீவுகளில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.
அதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நடப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் குசல் மெண்டிஸ் தலைமையிலும் புதிய பயிற்றுநர் கேர்ஸ்டனின் பயிற்றுவிப்பிலும் இலங்கை வெற்றிபெற்றது.
இதன் மூலம் 23 வருடங்களின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளை அதன் சொந்த மண்ணில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி ஒன்றில் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.
இந்த வெற்றியை தொடர் வெற்றியாக பரிணமிக்கச் செய்ய இலங்கை முயற்சிக்கவுள்ளது.
எவ்வாறாயினும் 13 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மும்னை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை அதன் சொந்த மண்ணில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது குறிப்பிடத்க்கது.
முதலாவது போட்டியில் போன்று நன்கு திட்டமட்டு சிறந்த வியூகங்களுடன் இலங்கை விளையாடும் பட்சத்தில் தொடர் வெற்றி கிடைப்பது நிச்சயம்.
ஆரம்ப வீரராக துடுப்பாட்ட வரிசையில் உயர்த்தப்பட்ட கமிந்து மெண்டிஸ், இரண்டாவது போட்டியில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை செவ்வனே ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது போட்டியில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசிக்கத் தவறிய மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக துடுப்பாட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் காமில் மிஷாரவை மீண்டும் ஆரம்ப வீரராக கேர்ஸ்டன் அணியில் இணைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமில் மிஷார அணியில் சேர்க்கப்பட்டால் கமிந்து மெண்டிஸ் மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடவேண்டிவரலாம்.
காமில் மிஷாரவை அணியில் சேர்க்காமல் டில்ஷான் மதுஷன்க அல்லது துனித் வெல்லாலகே ஆகிய இருவரில் ஒருவர் இறுதி அணியல் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இது இவ்வாறிருக்க, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் இப் போட்டியில் என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற முயற்சிக்கும் என்பதால் இலங்கை கடும் சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM