சட்டமா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் 2ஆம் திகதி நீதி மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ பீட ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத்தின் பிணை மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்துடுவ குறித்த மூவருக்கும் அழைப்பாணையை பிறப்பித்தார்.