அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக இடைநிறுத்தம் தேவை – ஆந்த்ரோபிக்

Published By: Digital Desk 2

06 Jun, 2026 | 02:35 PM
image

முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் அசுர வேக வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான  ஒரு ஒருங்கிணைந்த கூட்டுப் பொறிமுறையை உலகளாவிய நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. 

பிரபல ‘க்ளோட்’  சாட்பாட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிநவீன செயற்கை நுண்ணறிவு  மாடல்கள் மென்பொருள் குறியீடுகளை உருவாக்குவது போன்ற பணிகளை மனித உதவியின்றி மிக வேகமாகச் செய்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய வளர்ச்சிப் போக்கின்படி, போதுமான கம்ப்யூட்டிங் திறன் கிடைக்கும் பட்சத்தில், ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பானது தனக்கு அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பைத் தானே வடிவமைத்து உருவாக்கும் திறனைப் பெற்றுவிடும் என குறித்த நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இதற்காகத் தனது உள்நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படவும், விபரீத காலங்களில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் தற்காலிகமாக முடக்குவதற்கான நம்பகமான பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க 'நடவடிக்கை' எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆந்த்ரோபிக் குறிப்பிட்டுள்ளது.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இந்தத் தற்காலிக முடக்கக் கொள்கைக்கு அதன் முக்கியப் போட்டியாளரான ஓபன்ஏஐ நிறுவனம் மாற்றுக்கருத்து ஒன்றை முன்வைத்துள்ளது. 

"செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளின் வேகம் மற்றும் வளர்ச்சி குறித்த முடிவுகளை எந்தவொரு தனிப்பட்ட ஆய்வகமோ, தனியார் நிறுவனமோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவோ தீர்மானிக்கக் கூடாது. ஜனநாயக அரசாங்கங்களே இதற்கான விதிகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகளை இறுதி செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளது. 

முன்னணி செயற்கை நுண்ணறிவு  நிறுவனங்கள் தங்களுக்குள் சுயக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதை விட, அரசாங்கங்களின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவதே சிறந்தது என்பது ஓபன்ஏஐ நிறுவனத்தின் வாதமாக முன்னிறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10
news-image

வட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி...

2026-03-21 12:13:03