உலகக் கிண்ண கால்பந்து 2026: ஈரான் அணிக்கு விசா வழங்கியது அமெரிக்கா!

Published By: Digital Desk 2

06 Jun, 2026 | 02:17 PM
image

அடுத்த வாரம் தொடங்கவுள்ள ஃபிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக, ஈரான் தேசிய கால்பந்து அணிக்கு அமெரிக்கா விசா அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா, மெக்சிf்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கிண்ணத் தொடர் ஜூன் 11 தொடங்குகிறது.

ஈரான் அணி தனது முதல் லீக் போட்டியில் ஜூன் 15 லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டிக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அமெரிக்காவால் விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிகாரிகள், "ஈரான் அணியின் வீரர்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப, நிர்வாக உதவிப் பணியாளர்கள் உலகக்கிண்ணத்தில் போட்டியிடுவதற்குத் தேவையான அனைத்து விசாக்களும் வழங்கப்பட்டுவிட்டன" என்று தெரிவித்துள்ளனர்.

கடுமையான நிபந்தனைகள் அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், உலகக்கிண்ண வரலாற்றிலேயே தங்களுக்கு எதிரி நாடாக இருக்கும் ஒரு நாட்டை போட்டி நிகழ்த்தும் நாடு அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும், இந்த விசா முறையைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் பயங்கரவாதிகள் யாரும் அமெரிக்காவிற்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேசுகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய நபர்கள் எவருக்கும் விசா வழங்கப்படாது என திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். 

ஈரான் அணியின் சில வீரர்கள் தங்களின் கட்டாய இராணுவ சேவையின் போது இந்த அமைப்பில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விசா கிடைப்பதில் நீடித்த இழுபறி காரணமாக, ஈரான் அணி கடந்த மே மாத இறுதியில் அமெரிக்காவின் அரிசோனாவில் அமைத்திருந்த தனது பயிற்சி முகாமை மெக்சிக்கோவிற்கு மாற்றியிருந்தது. 

நேற்று வெள்ளிக்கிழமை வரை அணியின் முக்கிய நிர்வாகிகளுக்கு விசா மறுக்கப்பட்டதாக ஈரானின் 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள போதிலும், இது குறித்து ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

2026-07-22 16:20:06
news-image

டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால்...

2026-07-22 16:33:45
news-image

டெல்லி போராட்டம் : கைது செய்யப்பட்ட...

2026-07-22 11:57:27
news-image

அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கடந்த...

2026-07-22 11:13:45
news-image

Godzilla vs. Kong திரைப்படப் புகழ்...

2026-07-22 11:02:41
news-image

புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் மோடி இல்லம்...

2026-07-22 09:39:58
news-image

இந்தியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:...

2026-07-21 17:00:50
news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03