மீகொடை சந்திக்கு அருகில் தானசாலையின் மீது கெப் ரக வாகனம் மோதி ஆறு பேர் உயிரிழந்த விபத்துச் சம்பவத்தின் பின்னர் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான அத்தனாயக்ககே டொன் வசந்த மற்றும் மற்றொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பியோடிய இவர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்த நிலையிலும், விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்தி வந்த நிலையிலும், சந்தேகநபர்கள் இருவரும் இன்று சனிக்கிழமை ஒரு சட்டத்தரணி ஊடாக மீகொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மீகொடை பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM