மீகொடை தானசாலை விபத்து: தப்பியோடிய மூவரைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவி கோரல்!

06 Jun, 2026 | 12:38 PM
image

மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை - கொழும்பு பிரதான வீதி, மீகொடை சந்திக்கு அருகில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அன்றைய தினம் தானசாலை ஒன்றின்  வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் வேன்  ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்ததில் , 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

இவ்விபத்துத் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வேனின் சாரதி, ஜூன் 01 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தினுள் மேலும் மூன்று பேர் பயணித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து, வாகனத்தில் இருந்த அந்த மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள இந்த மூன்று சந்தேகநபர்களையும் தேடிக் கைது செய்வதற்காக இரு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவர்களைப் பற்றிய விபரங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்:

முதலாவது சந்தேகநபர்:

அத்தனாயக்ககே டொன் வசந்த (வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்), முகவரி: இல. 243/டி, குடமடுவ, சித்தமுல்ல, பிலியந்தலை.

இரண்டாவது சந்தேகநபர்:

எஸ். கே. குமார எனப்படும் செல்லமுத்து செல்லகுமார், முகவரி: இல. 342/டி, பெலன்வத்தை, பன்னிபிட்டிய.

மூன்றாவது சந்தேகநபர்:

டொன் சரத் ஹெட்டிகே, முகவரி: இல. 337/07, பெலன்வத்தை, பன்னிபிட்டிய.

இந்த நபர்கள்  குறித்த ஏதேனும் நம்பகமான தகவல் தெரிந்தால், உடனே பின்வரும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071 859 2179 

மீகொடை  பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி: 077 949 4188 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08