கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில் பலத்த கூட்டு நடவடிக்கை தேவை: டோக்கியோவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்து

Published By: Digital Desk 2

06 Jun, 2026 | 11:02 AM
image

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூன் 2 முதல் 4 வரை நடைபெற்ற தீவு நாடுகளின் பெருங்கடல் உச்சி மாநாட்டில்  இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நீர்வாழ் மற்றும் பெருங்கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கலந்துக்கொண்டு உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், மீன்பிடி அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், ஜப்பானியப் பேரரசர் நருஹித்தோ , நோர்வேயின் இளவரசர் ஹாகோன் மற்றும் ஜப்பானியப் பிரதமர் சனாயே தகைச்சி உள்ளிட்ட பல முக்கிய சர்வதேசத் தலைவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.மேலும் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹெய் சசகாவாவுடன் அமைச்சர் சந்திரசேகர் இருதரப்பு விசேட பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த  மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சிக்கலான கடல்சார் பிரச்சினைகளை எந்தவொரு தனி நாடும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காலநிலை மாற்றம், கடல் மாசடைதல், அதிகப்படியான மீன்பிடி மற்றும் கடல்சார் பல்லுயிர்த்தன்மை மிக வேகமாக அழிந்து வருவது போன்ற பிரச்சினைகளுக்கு சர்வதேச அளவில் கூட்டு நடவடிக்கை தேவை என்பதை சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமில்லாமல், நடைமுறைப் பங்களிப்புகள் மூலமே தீவு நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை வெல்ல முடியும் என அவர் தெரிவித்தார். எனவே, வளர்ந்து வரும் தீவு நாடுகளுக்கு அதிநவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தரவுப் பகிர்வு வலைப்பின்னல்களை வழங்குவதன் மூலம் வளர்ந்த நாடுகள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.

மற்றும் இலங்கையின் கடல் வள முகாமைத்துவ முயற்சிகள் குறித்துப் பேசிய அமைச்சர், தற்போது இலங்கையில் ‘நீலப் பொருளாதாரம்’ மற்றும் அறிவியல் அடிப்படையிலான மீன்பிடி முகாமைத்துவக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கடல் அலையாத்திக் காடுகள் , பவளப்பாறைகள் மற்றும் கடற்புல் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.நிலையான கடல்சார் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் சிறுதொழில் மீனவர்கள், கடலோர இளைஞர்கள் மற்றும் பெண்களை முதன்மைப் பங்காளிகளாக மாற்றி அவர்களை வலுப்படுத்துவதன் அவசியத்தை இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

இந்த மாநாட்டுப் பயணத்தின் மூலம் ஜப்பான் மற்றும் ஏனைய தீவு நாடுகளுடன் கடல் வளத் துறையில் புதிய தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகக் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08