கடற்படையின் அதிரடி சோதனை: பீடி இலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

06 Jun, 2026 | 10:26 AM
image

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த 477 கிலோகிராம் பீடி இலைகளுடன்  02 சந்தேக நபர்கள் 01 டிங்கி உடன் கைது செய்யப்பட்டனர். 

இதன்படி, நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கெளனியால் பரிசோதிக்கப்பட்டது.

அங்கு, பதின்மூன்று (13) பைகளில் அடைக்கப்பட்ட 477 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களும்  டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, செட்டப்படுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், டிங்கி மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24
news-image

பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதித் தலைமைப் பதவியை...

2026-09-09 16:28:09
news-image

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன்...

2026-09-09 17:44:22
news-image

பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை...

2026-09-09 16:28:56
news-image

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15...

2026-09-09 17:38:30
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்பு...

2026-09-09 19:45:08
news-image

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள்...

2026-09-09 16:30:03
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56
news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54