முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு வெளிநாட்டிற்கு செல்லலாம் என்ற அனுமதியை கொழும்பு மேல் நீதி மன்றம் இன்று வழங்கியது.

யோஷித இத்தாலிக்கு தனது தனிப்பட்ட தேவைக்காக செல்ல அனுமதி கோரி கொழும்பு மேல் நீதி மன்றில் அவரது சட்டத்தரணிகளால் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதி மன்றம் எதிர்வரும் 28ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அனுமதி தொடர்பாக மேல் நீதி மன்றினூடாக கடுவலை நீதவானுக்கு தற்காலிகமாக கடவுச்சீட்டை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.