(நெவில் அன்தனி)
இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை மேலும் ஊக்குவிப்பதையும் வலிமைப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரின் அறிவுறுத்தலின்பேரில் ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் வீரர்கள், பயிற்றுநர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர். கால்பந்தாட்டத்தை வெகுவாக நேசிப்பவர்களைக் கொண்ட இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக முன்ளாள் தேசிய வீரர் மற்றும் முன்னாள் பயிற்றுநர் 'றூமி' பக்கீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைமையகமான கால்பந்தாட்ட இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது சுயாதீன ஆலோசனைக் குழுவின் தலைவராக 'றூமி' பக்கீர் அலியை தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இக் குழுவின் பிரதி தலைவர்களாக சுமித் வல்பொல, ஜே. ஹசீம்டீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கால்பந்தாட்ட விளையாட்டின் மேம்பாட்டிற்காக சுயாதீன கால்பந்தாட்ட ஆலோசனைக் குழு சமர்ப்பிக்கும் யோசனைகள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுச் சபையின் அனுமதியுடன் செயற்படுத்தப்படும்.
இக் குழுவில் அசோக்க ரவீந்த்ர, லலித் வீரசிங்க, பி. ஆர். ப்ரீனா, ஏ. ஆனந்த குமார், சுகத் திலக்கரத் ன, மொஹமத் நௌஷாத், மொஹமத் ஹசன் றூமி, அநுருத்த வரக்காகொட, டில்க் பெர்னாண்டோ, இம்ரான் மொஹமத், ஜகத் ரோஹன, ஈ.பி. சன்ன, நதீக்க புஷ்பகுமார, இசுறு பெரேரா, ஒகஸ்டீன் ஜோர்ஜ், அநுர சம்ப்பத், ஷான்த குமார, மொஹமத் நஸார், ரௌமி மொஹைதீன், மொஹமத் நைசர் பஸால், பஸ்ருள் ரஹ்மான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.

முன்வரிசை இடமிருந்து வலமாக: ஒகஸ்டின் ஜோர்ஜ், மொஹமத் நைசர் மொஹமத் பஸால், ஜோசப் சாந்தகுமார் (ராசா), சுமித் வல்பொல (ஆலோசனைக் குழு பிரதித் தலைவர்), ஜஸ்வர் உமர் (இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர்), ' 'றூமி' பக்கீர் அலி (ஆலோகனைக் குழுத் தலைவர்), ஏ. ஆனந்தகுமார், ஜகத் ரொஹான், பி.ஆர்.ஏ. ப்றீனா, ஈ.பி. சன்ன. பின்வரிசையில் டட்லி ஸ்டெய்ன்வோல் (இ.கா.ச. தொழில்நுட்ப அதிகாரி), பஸ்ருள் ரஹ்மான், லலித் வீரசிங்க, அநுர சம்ப்பத், மொஹமத் இம்ரான், மொஹமத் நௌஷாத், டில்கி பெர்னாண்டோ, ஜீ.பி.சி. கருணாரட்ன, மொஹமத் ஹசன் றூமி, மொஹமத் நஸார், சமிந்த ஸ்டெய்ன்வோல் மற்றும் சம்பத் பெரேரா (இருவரும் இ.கா.ச. தொழில்நுட்ப அதிகாரிகள்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM