(நெவில் அன்தனி)
இலங்கையில் இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி அடங்கிய இந்தய ஏ அணியினர் இன்று (5) இலங்கை வந்தடைந்தனர்.
இந்தத் தொடர்களின்போது வைபவ் சூரியவன்ஷியின் அதிரடி துடுப்பாட்டத்தை இலங்கை இரசிகர்களுக்கு நேரடியாக காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இலங்கை வருகைதந்துள்ள இந்திய ஏ அணியினர் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அதனைத் தொடர்ந்து இலங்கை ஏ அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட 4 நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவர்.
இலங்கை வருகை தந்துள்ள திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணியில் ருத்துராஜ் கய்க்வோட் (விக்கெட் காப்பாளர்), ப்ரியன்ஷ் ஆரியா, அயுஷ் படோனி, குமார் குஷக்ரா, ப்ரப்சிம்ரன் சிங், வைபவ் சூரியவன்ஷி, ரியான் பரக், அன்ஷுல் கம்போஜ், அனுகுல் ரோய், நிஷாந்த் சிந்து, சூரியான்ஷ் ஷெஜ், அர்ஷாத் கான், விப்ராஜ் நிகம், யாஷ் தக்கூர், யுத்விர் சிங் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
மும்முனை தொடர் ஒருநாள் போட்டிகள் யாவும் தம்புள்ளையில் நடைபெறும்.
மும்முனை தொடர் விபரம்
ஜூன் 9 : இலங்கை ஏ எதிர் இந்தியா ஏ
ஜூன் 11: ஆப்கானிஸ்தான் ஏ எதிர் இந்தியா ஏ
ஜூன் 13: இலங்கை ஏ எதிர் ஆப்கானிஸ்தான் ஏ
ஜூன் 15: இலங்கை ஏ எதிர் இந்தியா ஏ
ஜூன் 17: ஆப்கானிஸ்தான் ஏ எதிர் இந்தியா ஏ
ஜூன் 19: இலங்கை ஏ எதிர் ஆப்கானிஸ்தான் ஏ
ஜூன் 21: இறுதிப் போட்டி
அதனைத் தொடர்ந்து இலங்கை ஏ அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் இடையிலான இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகள் காலியில் நடைபெறும்.
முதலாவது நான்கு நாள் கிரிக்கெட் போட்டி ஜூன் 25முதல் 28வரை நடைபெறும்.
இரண்டாவது நான்கு நாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 2முதல் 5வரை நடைபெறும்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM