பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு: சம வாய்ப்புகளை வழங்க விசேட குழு உறுதி!

Published By: Digital Desk 2

05 Jun, 2026 | 05:37 PM
image

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்ற பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார இணைந்து கொண்டுள்ளார்.

தேசிய மகளிர் அணி, இலங்கை 'ஏ' மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீராங்கனைகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். இச்சந்திப்புக்குக் கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தலைமை தாங்கினார்.

இதன்போது வீராங்கனைகளுடன் உரையாடிய குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் தேசிய வீரர்களான ரொஷான் மகாநாம, சிதத் வெத்திமுனி ஆகியோர், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்த வழிகாட்டல்களை வழங்கினர். அத்துடன் கூட்டுமுயற்சி ஒழுக்கம் மற்றும் அணியில் ஒவ்வொருவரினதும் பங்களிப்பை உணர்ந்து விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை மகளிர் அணி அண்மையில் ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய சாதனையைக் பாராட்டிய எரான் விக்ரமரத்ன, இது "இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய தருணம்" என வர்ணித்தார்.

இனிவரும் காலங்களில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு இணையான கவனம், வாய்ப்புகள் மற்றும் ஆதரவு என்பன மகளிர் கிரிக்கெட்டுக்கும் வழங்கப்படுவதை தங்களது குழு உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேமி சிட்டன்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் அணிக்கு எரான் விக்ரமரத்ன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54