அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த நாள கிழிசல் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

05 Jun, 2026 | 04:14 PM
image

எம்மில் சிலருக்கு திடீரென்று நெஞ்சில் குத்துவது போல் வலி ஏற்படும். இந்த வலி மெதுவாக முதுகு வரை பரவும். சிலருக்கு இந்த தருணத்தில் தாங்க இயலாத வகையினதான வலி உண்டாகும். இத்தகைய கடுமையான அசௌகரியம் ஏற்பட்டால்... அவர்களுடைய இதயத்தில் உள்ள ரத்த நாளத்தில் கிழிசல் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். இதனை பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானித்து அதற்குரிய நிவாரண சிகிச்சையை உடனடியாக வழங்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளியை வைத்தியர்கள் முதலில் எக்கோ டெஸ்ட் பரிசோதனையை மேற்கொள்வார்கள். இத்தகைய தருணத்தில் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் கிழிசல் ஏற்பட்டிருப்பதையும் அதனால் எத்தகைய பாதிப்பு உருவாகி இருக்கிறது என்பதையும் துல்லியமாக அவதானிப்பார்கள். இதனை மருத்துவ மொழியில் அயோட்டிக் டிஸ்சக்சன் என குறிப்பிடுவார்கள். 

இதனை உறுதிப்படுத்த சி டி ஓஞ்சியோகிராம் எனும் பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் உடனடியாக நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, நிவாரணம் அளிப்பர். இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் பென்டால் சர்ஜேரி, இன்டர்பொசிசன் கிராஃப்டிங் சர்ஜேரி என இரண்டு வகையான சத்திர சிகிச்சைகளில் நோயாளிக்கு எது பொருத்தமானதோ அதனை தெரிவு செய்து மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.‌

வைத்தியர் அஜித் - தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-07-18 16:04:06
news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03