ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

05 Jun, 2026 | 04:03 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால் தான் விவரிக்க இயலாத உடல் சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இதற்கு வைத்தியசாலைக்குச் சென்று நிவாரண சிகிச்சையை பெற்றாலும்... பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதே தவிர.. அவை நிரந்தரமாக எம்மிடமிருந்து நீங்குவதில்லை. இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உங்களுடைய சிகிச்சை முழுமையாக பலனளிக்க வேண்டும் என்றால்... உங்களின் அகம் பரிபூரணமாக இயங்க வேண்டும் என குறிப்பிடுகிறார்கள். அத்துடன் இதற்கான பிரத்யேக சில வழிமுறைகளையும் விவரித்திருக்கிறார்கள்.

உடல்நிலை சரியில்லாத போது வைத்தியரிடம் செல்கிறோம். அவர் பரிந்துரைத்த மருந்தியல் சிகிச்சையை பின்பற்றுகிறோம். எமக்கு உடனடியாகவும், தற்காலிகமாகவும் நிவாரணம் கிடைக்கிறது. ஆனால் அந்த சிகிச்சை முழுமையாக பலன் அளிக்க வேண்டும் என்றால்... எம்முள் இருக்கும் ஏழு சக்கரங்களும் இயல்பாக இயங்க வேண்டும். இவற்றில் ஏதேனும் தடை ஏற்பட்டு.. செயல்பாட்டில் முடக்கம் உண்டாகியிருந்தால்.. நீங்கள் சர்வதேச தரத்திலான சிகிச்சையைப் பெற்றாலும் நிவாரணம் தற்காலிகமாகத்தான் கிடைக்கும்.

இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் மூலமாகவே  எம்மை இயக்கும் ஏழு சக்கரங்களும் சீராக இயங்கும் என குறிப்பிடுகிறார்கள்.

காலையில் எழுந்ததும் 10 முதல் 15 நிமிடம் வரை மண் சார்ந்த காணியில்.. காலணி அணியாமல்.. பாதம் மண்ணில் பதிய பதிய நடந்திட வேண்டும்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது வாரத்திற்கு ஒரு முறையேனும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அருகில் உள்ள ஓடும் நதி மற்றும் கடல் ஆகியவற்றில் நீராட வேண்டும். அதில் சிறிது தூரம் காலாற நடந்திடவும் வேண்டும்.

காலையில் எழுந்ததும் காலணி அணியாமல் நடைப்பயிற்சி பத்து நிமிடம் செய்த பிறகு.. சூரிய நமஸ்காரத்தை அல்லது சூரியனை இரண்டு கண்களாலும் பார்த்து வணங்கிட வேண்டும்.

உங்களது வீட்டில் அருகில் இருக்கும் பூங்காவிற்கு அல்லது மரங்கள் அடர்ந்த பகுதிக்கு சென்று உங்களுக்குப் பிடித்த மரத்தின் அடியில் ஐந்து நிமிடம் அமைதியாக உட்காருங்கள். மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் தருணத்தில் அந்த மரத்தை உங்களுடைய இரண்டு கைகளாலும் மூன்று நிமிடம் வரை அமைதியாக கட்டிப்பிடிக்க வேண்டும்.

இரவு நேரத்தில் மின்சார ஒளி குறைந்த தருணத்தை தெரிவு செய்து ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து அதனை ஒரு நிமிடம் வரை துல்லியமாக அவதானம் செய்யுங்கள்.

ஒவ்வொரு பௌர்ணமி நாளன்று இரவு நேரத்தில் பௌர்ணமி ஒளியையும் , பௌர்ணமி நிலவையும் அமைதியாக பார்த்து ரசிக்க வேண்டும்.

இவற்றை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க தொடங்கினால்.. உங்களின் உள்புறத்தில் அமைந்து... இயக்கிக் கொண்டிருக்கும் ஏழு சக்கரங்களும் இயற்கையுடன் இணைந்து சீராக இயங்கி, உங்களின் உடல்நலம் மற்றும் உளவியல் நலத்தை ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் பராமரிக்கும். அத்துடன் உங்கள் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் இந்த பஞ்சபூத ஆற்றல்களால் உட்கிரகிக்கப்பட்டு, உங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.  இயற்கையோடு இணைந்து பயணிப்போம். ஆரோக்கியத்துடன் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29