சம்ஹாரம் - திரைப்பட விமர்சனம்

05 Jun, 2026 | 03:53 PM
image

சம்ஹாரம் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு: வித்யா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள்: பிரஜின், நியா வர்கீஸ் ஷருமிஷா, கணேஷ் சாவரட்டில், ராஜ் குமார், தென்றல் ராஜா மற்றும் பலர்.

இயக்கம்: ராம் பிரபா

மதிப்பீடு : 2/5

தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் கதையின் நாயகனாக நடித்து வரும் பிரஜின்- முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் என்ற சிறிய எதிர்பார்ப்புடன்... பட மாளிகைக்குள் 'சம்ஹாரபம்' படத்தை காணச் சென்ற ரசிகர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.

நரசிம்மனு( பிரஜின்) க்கு ஷாலினி ( நியா வர்கீஸ்) என்ற மனைவியும் மித்ரா( ஷருமிஷா)  சித்ரா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவர்களில் சித்ரா என்ற சகோதரியை இழந்த நரசிம்மன்.. தன் மற்றொரு தங்கையான மித்ராவை உறவினரான இன்பா( கணேஷ்) விற்கு திருமணம்  செய்துவைக்க திட்டமிடுகிறார். இன்பாவை திருமணம் செய்து கொள்வதில் மித்ராவிற்கு விருப்பம் இல்லை. ஏனெனில் அவர் அசோக்( தென்றல் ராஜா) என்ற இளைஞரை காதலிக்கிறார். இந்நிலையில் நரசிம்மன் மித்ராவின் விருப்பத்தை புறக்கணித்து, இன்பாவுடன் கட்டாய திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறார். சூழலின் நெருக்கடியை உணர்ந்த மித்ரா .. வீட்டிலிருந்து தப்பிக்க, அதனை நரசிம்மன் முறியடித்து மித்ராவை வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி விடுகிறார்.  மாப்பிள்ளையான இன்பா சிறையில் இருந்து விடுதலை ஆகி நேரடியாக மித்ராவை மணம் முடிக்க நரசிம்மனின் வீட்டிற்கு வருகை தருகிறார். இந்த தருணத்தில் மித்ரா தன் காதலரான அசோக்கிற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு, 'என்னை இங்கிருந்து விடுவித்து அழைத்துச் செல். இல்லையென்றால் இறந்து விடுவேன்' என பயத்துடன் சொல்ல... 'உனக்கு மாப்பிள்ளை ஆகப் போகும் இன்பாவை நாம் இருவரும் சேர்ந்து கொன்று விடுவோம்' என்று சொல்ல.. மித்ரா சற்றி ஆறுதல் அடைகிறார். நரசிம்மனின் காவலை மீறி மித்ராவின் காதலரான அசோக் ..மித்ராவின் அறைக்குள் தந்திரமாக வந்துவிடுகிறார். இருவரும் தருணம் பார்த்து இன்பாவை கொலை செய்வதற்காக முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில்... நரசிம்மனின் வீட்டிற்கு முகம் தெரியாத தந்தையும், மகளும் ஓர் இரவு அந்த வீட்டில் தங்க அடைக்கலம் கேட்டு வருகிறார்கள்.. நண்பனின் அறிமுகம் என்பதால் அந்த முகம் தெரியாத இருவருக்கும் நரசிம்மன் அடைக்கலம் கொடுக்கிறார். இத்தகைய சூழலில் மித்ராவும், அசோக்கும் இணைந்து திட்டமிட்டபடி இன்பாவை கொலை செய்தார்களா? இல்லையா? என்பதையும், மித்ராவிற்கும் அசோக்கிற்கும் திருமணம் நடைபெற்றதா? அல்லது மித்ரா விற்கும் இன்பாவிற்கும் திருமணம் நடைபெற்றதா?  என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை. 

எளிமையான கதை. ஒரு வீட்டில் ஓர் இரவில் நடைபெறுவது போன்ற திரைக்கதை.. ஓரளவிற்கு நம்பகத் தன்மை மிக்க காட்சி அமைப்பு... பார்வையாளர்கள் எளிதில் யூகிக்க இயலாத வகையில் படத் தொகுப்பு.. என பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும்... குறைந்த முதலீட்டு திரைப்படம் என்பதை ஒளிப்பதிவும், பின்னணி இசையும் உறுதிப்படுத்துகிறது.

நரசிம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரஜின் முரட்டு தோற்றத்துடன் கூடிய பாசமிகு அண்ணனாக நடித்து ரசிகர்களின் மனதை எளிதில் கவர்கிறார். அவருக்கு ஜோடியாக ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நியா வர்கீஸ் அழகு பதுமை.

மித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஷருமிஷா அதிக அளவில் திரையை ஆக்கிரமித்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இளம் தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.  ஓர் இரவில் நடைபெறும் காட்சி என்பதாலும்...லாஜிக் படி ஒரே ஆடையை படம் முழுவதும் அணிந்திருந்தாலும்.. இளமையை ரசிக்க முடிகிறது.

இன்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கணேஷ் -- நடிப்பில் விட எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.

பாடல்கள் இல்லை என்பது பெரும் ஆறுதலாக இருந்தாலும்.. நகைச்சுவை காட்சிகள் ( டார்க் கொமடி) இல்லாதது குறைதான்.

சம்ஹாரம் - சூரசம்ஹாரம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50