காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் டீசர் வெளியீடு

05 Jun, 2026 | 03:44 PM
image

அண்மைக்காலமாக சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும்' தி இந்தியா ஸ்டோரி ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ் -தெலுங்கு- இந்தி-  ஆகிய மொழிகளில் படமாளிகையில் வெளியாகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சேட்டன் டி கே & டீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ' தி இந்தியா ஸ்டோரி'  திரைப்படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரேயாஸ் தல்படே,  த்ரிஷா ஷார்தா, முரளி சர்மா, அதுல் திவாரி, மனிஷ் வாத்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் நிஷாந்த் பகவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார்.

விவசாய நிலங்களில் விவசாயிகள் பாவிக்கும் உரங்களில் நடைபெறும் மோசடியை குறித்து விழிப்புணர்வு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஐ ஜி  புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் சாகர் பி. ஷிண்டே தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில்.. இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்திய விவசாய நிலங்களில் பாவிக்கப்படும் கலப்பட உரங்களால் மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு -உடல் உறுப்பு இழப்பு மற்றும் விவரிக்கப்படாத நாட்பட்ட நோய் பாதிப்புகள் குறித்து விவரிக்கப்பட்டிருப்பதால்.. சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் இதனை பெரிதும் வரவேற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51