சிம்ரன் வெளியிட்ட நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடிக்கும் 'தி ஒன் : வித்இன் யூ' திரைப்படத்தின் பிரத்யேக காணொளி

05 Jun, 2026 | 03:38 PM
image

'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, 'ஜெய் பீம்' படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை லிஜோ மோல் ஜோஸ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு,' தி ஒன் : வித்இன் யூ' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.  இதனை தமிழ் சினிமாவின் 'எவர்கீரீன் குயின்' நடிகை சிம்ரன் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அறிமுக இயக்குநர் அதிலன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஒன் :வித்இன் யூ ' திரைப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ்,  'பருத்திவீரன்' சரவணன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பவெல் நவகீதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத் ராஜா தியாகராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதான் இசையமைத்திருக்கிறார். ஹைப்பர் லிங்க் எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹரிஷ்னி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் ஒரு சிவராத்திரி நாளன்று வெவ்வேறு வாழ்வியலை கொண்ட நான்கு மனிதர்கள் எதிர்பாராத சம்பவங்கள் மூலம் அசாதாரணமான சூழலில் சிக்குகிறார்கள். அதன் பிறகு அவர்கள் எதிர்கொண்ட சவால்களும்.. நிகழ்வுகளும் தான் இப்படத்தின் கதை'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51