வெனிசுவெலா இடைக்கால ஜனாதிபதி டெல்சியின் இந்திய விஜயம் ; பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் சந்திப்பு

05 Jun, 2026 | 03:06 PM
image

இந்தியாவுக்கு கடந்த புதன்கிழமை (3) விஜயம் மேற்கொண்டுள்ள வெனிசுவெலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ், டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துள்ளார். 

எதிர்வரும் 7ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக விஜயம் செய்துள்ள டெல்சி, நேற்று வியாழக்கிழமை (4) டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை  சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது எரிசக்தி, வர்த்தகம், முதலீடு ஆகியவை தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதம் குறித்தும் ஆராய்ந்தனர். 

அதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் டெல்சி சந்தித்துப் பேசினார். 

வெனிசுவெலாவுடனான உறவை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை ஜெய்சங்கர் நேற்றைய சந்திப்பு வேளையில் டெல்சியிடம் உறுதிப்படுத்தினார். 

மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, சுகாதார நலன், மருந்துப் பொருட்கள், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலான துறை சார்ந்த விடயங்களைப் பற்றி கலந்தாலோசிப்பதற்காக இந்திய அரசியல் பிரமுகர்கள் சிலரை சந்தித்து வருகிறார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் டெல்சி, வெனிசுவெலா நாட்டின் எண்ணெய்த்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, அவர் தலைமையிலான குழுவொன்று இந்தியாவுக்கு எரிசக்தி வார மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12
news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32