இந்தோனேசியாவில் லெவோடோபி எரிமலை மீண்டும் வெடிப்பு: சாம்பல் மேகங்களால் உள்ளூர் விமான நிலையம் மூடப்பட்டது!

Published By: Digital Desk 2

05 Jun, 2026 | 03:15 PM
image

கிழக்கு இந்தோனேசியாவில் மிகவும் தீவிரமாகி வரும் 'லெவோடோபி லாகி-லாகி' எரிமலை, இன்று வெள்ளிக்கிழமை (05) பலமுறை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் வான்பரப்பில் பிரம்மாண்டமான சாம்பல் கோபுரங்கள் உருவாகியதை அடுத்து, அப்பகுதியிலுள்ள உள்ளூர் விமான நிலையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

புளோரஸ் தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை, இன்றையதினம் முற்பகல் 11:15 மணியளவில் சக்திவாய்ந்த முறையில் வெடித்ததோடு இதன்போது எரிமலைக் குழம்பின் எச்சங்கள் மற்றும் சாம்பல் வான்நோக்கி சுமார் 2.5 கிலோமீட்டர் (2.5km) உயரத்திற்குச் சீறிப்பாய்ந்ததாக அந்நாட்டு எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பின் காரணமாக, அதிலிருந்து மேற்கே 60 கி.மீ தொலைவிலுள்ள 'மௌமேரே' நகரின் உள்ளூர் விமான நிலையச் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் 5 உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி பார்தஹியன் பஞ்சைதான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எரிமலைக்கான ஆபத்து எச்சரிக்கை இரண்டாவது மிக உயர்ந்த மட்டத்தில் பேணப்படுவதுடன், எரிமலை வாயைச் சுற்றியுள்ள 5 கி.மீ பகுதிக்குள் மக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பலத்த மழை பெய்தால் ஆறுகள் வழியாக 'லாகர்' எனப்படும் அபாயகரமான எரிமலைக் குழம்பு வெள்ளம் பாயக்கூடும் என்பதால், ஆற்றங்கரை வாழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழமையாகும். கடந்த ஜூலை மாதமும் இந்த எரிமலை 18 கி.மீ உயரத்திற்குச் சாம்பலை உமிழ்ந்ததால் பாலி சர்வதேச விமான நிலையத்தின் 24 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12
news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32