பெருந்தொற்றுகளைத் தடுக்கும் புதிய தடுப்பூசி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டுபிடிப்பு!

Published By: Digital Desk 2

05 Jun, 2026 | 02:09 PM
image

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய பல்வேறு வகையான வைரஸ்கள் மற்றும் புதிய பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்கக்கூடிய, முற்றிலும் புதிய வடிவிலான தடுப்பூசி ஒன்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தடுப்பூசி ஒன்றின் மிக முக்கிய அங்கமான 'ஆன்டிஜென்' பகுதி, முற்றிலும் செயற்கை நுண்ணறிவினால் வடிவமைக்கப்பட்டு மனிதர்களில் சோதிக்கப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ்கள் தொடர்ந்து தங்களின் உருவமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. இதனால் தான் கொவிட் மற்றும் குளிர்கால காய்ச்சல் தடுப்பூசிகளை நாம் அடிக்கடி மாற்றிப் புதுப்பிக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக, உலகெங்கும் உள்ள பல்வேறு கொரோனா வைரஸ்களின் மரபணு ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்து இதன் அடிப்படையில், வைரஸ்கள் எவ்வளவுதான் பிறழ்வடைந்தாலும் அல்லது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவினாலும், அவற்றை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திறன் கொண்ட ஒரு சூப்பர் ஆன்டிஜென் பகுதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வடிவமைத்துள்ளது.

"நாங்கள் எப்போதும் வைரஸ்களுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தொழில்நுட்பம் எங்களை வைரஸ்களின் வளர்ச்சிக்கு ஒருபடி முன்னே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது" என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜொனாதன் ஹீனி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இத்தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்காக 39 ஆரோக்கியமான மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதன் முடிவுகள் 'ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இது எவ்வளவு தூரம் ஆற்றலுடன் வேலை செய்கிறது என்பதை அறிய சுமார் 200 பேரைக் கொண்டு அடுத்தகட்ட பரிசோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆரம்பகட்ட வெற்றியைக் கொண்டு, கேம்பிரிட்ஜ் குழுவினர் ஒவ்வொரு வருடமும் மாற்றத் தேவையில்லாத உலகளாவிய காய்ச்சல் தடுப்பூசி, பறவைக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் ஆப்பிரிக்காவில் பரவி வரும் கொடிய 'எபோலா' வைரஸிற்கான தடுப்பூசிகளையும் உருவாக்கும் விலங்குப் பரிசோதனைகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இத்தடுப்பூசி ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஆண்டி பொல்லார்ட், "செயற்கை நுண்ணறிவு என்பது தடுப்பூசி ஆராய்ச்சியில் ஒரு கேம் சேஞ்சராக மாறப்போகிறது. இது தடுப்பூசி தயாரிக்கும் வேகத்தை பல மடங்கு அதிகரித்து, எதிர்காலத்தில் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12
news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32